செவ்வாய், 6 ஜூலை, 2010

தம் தலையில் தாமே மண்ணை இரண்டாம் முறையாக கொட்டிகொண்டுள்ளார்கள்.

தலையங்கம் :


இப்போதுதான் தம் தலையில் தாமே மண்ணை இரண்டாம் முறையாக கொட்டிகொண்டுள்ளார்கள்.

முதல் முறை எனபது,  இலங்கை தமக்கான உரிமைகளில் சிலவற்றையாவது கொடுக்கும்  என்ற நம்பிக்கையில் , நார்வே போன்ற நாடுகள் நடுவத்துவம் பேசுகின்றன என்ற நம்பிக்கையில் .. போரை வலுக்கட்டாயமாக நிறுத்தி .. பேச்சு வார்த்தையில் ஈடு பட்டிருந்த விடுதலை புலிகளை மற்றும் தமிழ் மக்களை, பேச்சு வார்த்தையில் முடிக்க வேண்டிய அரசியல் தீர்வை  செய்யாமல் , கட்டாயமாக போரை திணித்து  அப்பாவி தமிழர்களை இந்தியாவின் துணை கொண்டு கொன்றது.


அதுதான் இலங்கை முதல்முறையாக தம் மீது தானே மண்ணை போட்டுக்கொண்ட முதல் செயல்.

இப்போது சர்வதேச சமூகங்களை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளது இரண்டாவது முறையாக தம் மீது மண் மட்டும் இல்லாமல் தானே சேற்றை பூசிகொண்டுள்ளது.



தலையங்க  செய்தி :

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை  அமைச்சர்  விமல் வீரவன்ஸ தலைமையிலான பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை முற்றுகையிட்டனர். ஐ.நா. அலுவவகத்திற்கு வெளியே மேடையொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைத்தனர். இதனால் ஐ.நா. அதிகாரிகள் கட்டிடத்திற்குள் செல்வதும் வெளியேறுவதும் தடுக்கப்பட்டது.


அதேவேளை பான் கீ மூனின் உருவ பொம்மையை ஆர்ப்பாட்டக்காரர்கள் செருப்புகளால் தாக்கினர்.



ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பான தனது நிபுணர் குழுவை கலைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து அகலப்போவதில்லை என அமைச்சர் விமல் வீரவன்ஸ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக